
சென்னை மெட்ரோ ரயில் திட்ட விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், 1-2-2021 அன்று மத்திய அரசின் 2021-22 ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையை இந்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அப்பொழுது அவர் ஆற்றிய உரையின் பத்தி 59ல் குறிப்பிட்டது: "ரூ 63,246 கோடி செலவில் நிறைவேற்றப்படும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசின் பங்களிப்பு நிதி (counterpart funding) வழங்கப்படும்".
நேற்றுப் பேசிய தமிழ்நாடு முதல்வர் இதுவரை மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூடத் தரவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார்.
முதலமைச்சரின் கூற்றுக்கு மத்திய அரசு - குறிப்பாக இந்திய நிதி அமைச்சர் - பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.