அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் கலைஞர்: ராகுல் புகழாரம்

“தமிழ் மக்களின் பண்பாட்டை, மொழியை பாதுகாத்தவர் கருணாநிதி”

News image
Updated On :3 ஜூன் 2024, 5:57 am

DIN

இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று (ஜூன் 3-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், தில்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ராஜா உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

Story image

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிறகு சோனியா காந்தி செய்தியாளர்களுடன் பேசுகையில், “திமுகவைச் சேர்ந்த எனது நண்பர்களுடன் கலைஞரின் 100-வது ஆண்டு விழாவான புனிதமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேம். அவரை சந்திக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. பல சந்தர்ப்பங்களில், அவரின் அறிவுரைகள் பயனடைந்தது.” எனத் தெரிவித்திருந்தார்.

Story image

ராகுல் காந்தி செய்தியாளர்களுடன் பேசுகையில், “தமிழ்நாட்டில் தலைசிறந்த தலைவர் கருணாநிதி. தமிழ் மக்களின் பண்பாட்டை, மொழியை பாதுகாத்தவர்.” எனத் தெரிவித்தார்.

மேலும், கருணாநிதியின் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்திய படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி பதிவிட்டதாவது:

“தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்தநாளில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.

தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தலைவர். சமூக நீதியை மேம்படுத்துதல், பொருளாதார சமத்துவத்தை முன்னேற்றுதல் மற்றும் தமிழ் மக்களின் மொழி, கலாசாரத்தலுக்காக பாடுபட்டவர்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.