அண்ணாமலையால் கூட்டணியில் பிளவு: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி
அண்ணாமலை பாஜக தலைவர் ஆனது முதல் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, பிளவுற்றுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக கொரடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு இன்று கோவை அதிமுக அலுவலகத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. கடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்திருந்தாலும், அடுத்து பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 19.3% வாக்குகள் அதிமுக பெற்றது. இந்த தேர்தலில் 20.4 சதவீத வாக்குகள் பெற்றதன் மூலம், தற்போது வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.
மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசில் செயல்படுத்தி உள்ளது. தொடர்ந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு அதிமுக செயல்படும் என்றார்.
அண்ணாமலை பாஜக தலைவர் ஆனது முதல் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, பிளவுற்றுள்ளது என் குற்றம் சாட்டினார். பாஜக அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டு இருந்தால் 30 முதல் 35 இடங்களை வென்றிருக்க முடியும் என்றார்.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.