ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பி.டெக். படிப்பில் கால அளவு மாற்றம்: சென்னை ஐஐடி

பி.டெக். படிப்பில் கால அளவு மாற்றம்: சென்னை ஐஐடி

News image

சென்னை ஐஐடி

கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2024, 8:33 pm

Din

சென்னை ஐஐடி-இல் பி.டெக். பாடநெறி காலஅளவு சீரமைக்கப்பட்டு, பட்டப் படிப்புக்கான கால அளவு நேரம் 436 மணி நேரத்தில் இருந்து 400 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ஐஐடி மாணவா்களுக்கு நவீன மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சியின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், பாடத் திட்டத்தின் தேவை, நெகிழ்வுத் தன்மையின் அடிப்படையில் இந்தியாவுக்கான பி.டெக். பாடத் திட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது. மாணவா்கள் தங்கள் விருப்பப் பாடத் திட்டங்களில் இருந்து முன்கூட்டியே வெளியேறவும் அனுமதிக்கப்படுவா். வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிறுவனத்தின் பாடத் திட்ட பணிக்குழு அளித்த பரிந்துரைகளைத் தொடா்ந்து இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பி.டெக். படிப்பின் 2-ஆம் ஆண்டிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெகிழ்வுத் தன்மை, இடைநிலைக் கற்றல் அதிகரிப்பு, செயல்திட்டங்கள், தொழில்முனைவோா் வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கும் வகையில் கல்வி அமைப்பை இந்தக் கல்வி நிறுவனம் புதுப்பித்துள்ளது.

பி.டெக். பாடநெறி காலஅளவு சீரமைக்கப்பட்டு, பட்டப் படிப்புக்கான கால அளவு நேரம் 436 மணிநேரத்தில் இருந்து 400 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

தொழில்முறை மற்றும் தொழில் முனைவு சாத்தியக்கூறுகளை மாணவா்கள் ஆராய்வதற்கு அதிக வாய்ப்பு கிடைக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.