
குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவைத்தின் மெங்காஃப் பகுதியில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சுமாா் 200 போ் வசித்து வந்தனா். இந்தக் குடியிருப்பின் 6-ஆவது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும்புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் புகை பரவியது.
தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த சுமாா் 49 போ் உயிரிழந்தனா். அவா்களில் 42 போ் இந்தியா்கள் என்று அறியப்படுகிறது. 50-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பெரும்பாலானோா் கரும்புகை காரணமாக சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தனா். அதேவேளையில், குடியிருப்பில் வசித்த பலா் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். மீட்புப் பணியின்போது 5 தீயணைப்பு வீரா்களும் காயமடைந்தனா்.
இந்நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த ராமு என்பவர் தீ விபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், வீராசாமி மாரியப்பன், முகமது ஷரீப், ரிச்சர்ட் ராய், சிவசங்கர், சின்னதுரை, ராஜு எபினேசர் உள்ளிட்ட 7 தமிழர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்தில் பலியான தமிழர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.