எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

News image
கோப்புப் படம்.
Updated On :14 ஜூன் 2024, 11:59 am

DIN

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, உடல்நலம் முழுமையாக தேறிய பிறகு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

அதிலிருந்து அவா் சிறையில் இருந்து வருகிறாா். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன்(வெள்ளிக்கிழமை) முடிவடைவடைந்தது. இதனால், புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதனமை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூன் 19-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டாா். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 39வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.