ப.சிதம்பரத்துக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

ப.சிதம்பரத்துக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

ப.சிதம்பரத்துக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on

ப.சிதம்பரத்துக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் திருமண விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

நடைபெற உள்ள தேர்தலில் ஆட்சி அதிகாரம், பரிசு வழங்குவார்கள், பணம் கொடுப்பார்கள், அமைச்சர்கள் குவிந்து வேலை செய்வார்கள். எனவே அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது.

பணபலத்தையும், அதிகார பலத்தையும் கையில் வைத்துக்கொண்டு தேர்தலை சந்திப்பதால் நாங்கள் போட்டியிடவில்லை.

ப.சிதம்பரத்துக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!
கொலைகார முதலையைக் கொன்று விருந்து!

விழுப்புரம் மக்களவைத் தேர்தலில் 6000 ஓட்டுக்கள் தான் குறைவு.

மக்களவைத் தேர்தலுக்கு ஒரு முறையிலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு முறையிலும் மக்கள் வாக்களிப்பார்கள். வெற்றி மற்றும் தோல்வி என்பது அரசியல் கட்சிகளுக்கு மாறி மாறி தான் வரும்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதல்வர் கூறுவது கனவு தான். அது பலிக்காது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com