மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பு!

News image
கோப்புப் படம்.
Updated On :24 ஜூன் 2024, 4:23 am

DIN

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதோடு, நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டன. பயணிகளின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அது வதந்தி என்பது தெரியவந்தது.

இதனிடையே மீண்டும் மின்னஞ்சல் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய்கள், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.