கணபதிபாளையம் அருகே முன்னாள் அமைச்சர் வீட்டில் கொள்ளை
முன்னாள் அமைச்சரின் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பு


கணபதிபாளையம் அருகே முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் தோட்டத்து வீட்டில் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கணபதிபாளையம் அருகே முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் தோட்டத்து வீடு உள்ளது. இன்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட வேலையாட்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
50 ஆயிரம் வரை ரொக்கம் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் வீட்டின் உரிமையாளர் வந்த பிறகே கொள்ளை பற்றிய முழு விபரம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...