இரவு முதல் கனமழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையிலும் மழை பெய்வதையொட்டி அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் 14 செ.மீ மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. கோவை மலைப்பகுதி மற்றும் நீலகிரிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான இடியுடன் கூடிய மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.