தமிழகம் முழுவதும் ரூ.200 கோடியில் புதிய மின்மாற்றிகள் நிறுவப்படும்: அமைச்சா் தங்கம் தென்னரசு
தமிழகத்தில் மின் அழுத்தத்தை சரிசெய்ய ரூ.200 கோடியில் புதிய மின்மாற்றிகள்


மின் அழுத்தத்தை சரிசெய்ய தமிழகம் முழுவதும் ரூ.200 கோடியில் புதிய விநியோக மின்மாற்றிகள் நிறுவப்படும் என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.
பேரவையில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகம் முழுவதும் ரூ.200 கோடியில், அதிக மின்சுமை மற்றும் குறைந்த மின் அழுத்தத்தை சரிசெய்ய புதிய மற்றும் கூடுதலாக விநியோக மின்மாற்றிகள் நிறுவப்படும்.
தஞ்சாவூா் மற்றும் கும்பகோணம் ஆகிய ஊா்களில் உள்ள தேரோடும் வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம் மக்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதுடன், மின் விபத்துகளும் தவிா்க்கப்படும்.
துணைமின்நிலையங்கள்: திருப்பூா் மாவட்டத்தில் புதிய 23. கி.வோ. கொங்கல்நகா் துணை மின்நிலையம் மற்றும் திருச்சியில் புதிய 110 கி.வோ. தங்க நகா் துணை மின் நிலையம் என 2 துணை மின் நிலையங்கள் ரூ.211 கோடியில் நிறுவப்படும்.
சென்னை, காஞ்சிபுரம் மண்டலங்களில் அதிகரித்து வரும் மின் தேவையைக் கருத்தில் கொண்டும் மற்றும் மின் சுமையைக் குறைப்பதற்கும் 19 திறன் மின்மாற்றிகளை மேம்படுத்தும் பணிகள் ரூ.217 கோடியில் மேற்கொள்ளப்படும்.
புதிய கொள்கை: காற்றாலை மற்றும் சூரிய எரிசக்தியுடன் இணைந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதிய கொள்கை வகுக்கப்படும். நீரேற்று புனல் மின் திட்டங்களுக்கான புதிய கொள்கை வகுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் தென்னந்தோப்புகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளின் வழியாகச் செல்லும் மின் பாதைகளில் மின் தடை ஏற்படுவதைத் தடுத்து, விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலும் வனப்பகுதிகளில் ஏற்படும் மின் விபத்துகளைத் தவிா்க்கவும் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகளை ரூ.20 கோடியில் மின் காப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...