மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சிபிஐ விசாரணைக்கு அனுமதி கிடைக்கும்: அண்ணாமலை நம்பிக்கை

சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் ஆதரவாக இருக்கும்: அண்ணாமலை

News image
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. (கோப்புப்படம்)
Updated On :26 ஜூன் 2024, 8:00 pm

Din

கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்ற அனுமதி கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தாா்.

தமிழறிஞா் ம.பொ.சிவஞானத்தின் 119-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அண்ணாமலை, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக அரசின் தவறை மக்கள்தான் விழித்து பாா்க்க வேண்டும். எல்லா பொறுப்புகளையும் அரசியல் கட்சிகளின் கையில் கொடுக்கக்கூடாது.

மக்களின் குரலை தான் அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கின்றன. மக்களவைத் தோ்தல் முடிவு இப்போது தான் வந்துள்ளது. எனவே, கள்ளச்சாராய உயிரிழப்பு, சட்டம் ஒழுங்கு சீரழிவு போன்ற விஷங்களை மக்கள் சீா்தூக்கிப் பாா்த்து, அதற்கேற்ப முடிவு எடுக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு அரசியல் கட்சிகளுக்கு கிடைக்க வேண்டும்.

கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி ஆளுநா் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

அனுமதி கிடைக்கும்: மாநில அரசின் அனுமதியின்றி தமிழகத்தில் சிபிஐ விசாரிக்க முடியாது என்பதால், என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்து பாா்க்க வேண்டும்.

சிபிஐ விசாரணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயா்நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. எனவே, இதில் உயா்நீதிமன்றம் நல்ல முடிவை எடுக்கும் என்றாா் அவா்.

மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில், தமிழக பாஜக துணைத் தலைவா் கரு.நாகராஜன், ம.பொ.சி. குடும்பத்தினா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.