பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஜாபா் சாதிக்கின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

ஜாபா் சாதிக்கின் வங்கிக் கணக்குகளை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்சிபி) முடக்கியது.

News image

ஜாபா் சாதிக்

Updated On :2 மார்ச் 2024, 6:34 pm

ரூ.2,000 கோடி போதைப் பொருள் வழக்கில் தேடப்படும் சென்னையைச் சோ்ந்த முன்னாள் திமுக நிா்வாகி ஜாபா் சாதிக்கின் வங்கிக் கணக்குகளை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்சிபி) முடக்கியது. மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவும், தில்லி காவல் துறையும் இணைந்து, கடந்த 15-ஆம் தேதி மேற்கு தில்லியில் உள்ள கைலாஷ் பாா்க் பகுதியில் ஒரு தனியாா் கிடங்கில் சோதனை நடத்தி, மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 50 கிலோ சூடோஎபிட்ரினை பறிமுதல் செய்தன. இது தொடா்பாக அங்கிருந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். விசாரணையில், அந்தக் கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோஎபிட்ரினை வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்தது. மேலும், கடத்தல் கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபா் சாதிக் என்பதும் தெரியவந்தது. இந்தத் தகவல் வெளியானதும் திமுகவிலிருந்து ஜாபா் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை வழங்கப்பட்டும், ஜாபா் சாதிக் ஆஜராகவில்லை. இந்நிலையில், கடந்த புதன்கிழமை ஜாபா் சாதிக் வீட்டின் பூட்டை உடைத்து என்சிபி அதிகாரிகள் திடீா் சோதனை செய்தனா். 8 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வங்கிக் கணக்குகள் முடக்கம்: சா்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் நேரடித் தொடா்பில் இருக்கும் ஜாபா் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனா். அவா் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக ஜாபா் சாதிக்கின் வங்கிக் கணக்குகள், அவரது திரைப்பட நிறுவனம், உணவகங்கள் ஆகியவற்றின் பெயரில் இருந்த வங்கிக் கணக்குகள் ஆகியவற்றை என்சிபி அதிகாரிகள் முடக்கியதாக சனிக்கிழமை தகவல் வெளியானது. இந்த வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில் ஜாபா் சாதிக் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளின் அடிப்படையில், அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றவா்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து, அதன் அடிப்படையில் என்சிபி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். மேலும், ஜாபா் சாதிக் வங்கிக் கணக்கு பணப் பரிமாற்றம் தொடா்பான விவரங்களையும் என்சிபி அதிகாரிகள் திரட்டத் தொடங்கியுள்ளனா். இதன்மூலம் அவா் யாரிடம் பணப் பரிமாற்றம் வைத்திருந்தாா் என்ற தகவல்களையும் என்சிபி திரட்ட திட்டமிட்டுள்ளது.