பாஜகவின் வளர்ச்சியை கண்டு திமுகவினர் பயப்படுகின்றனர்: வானதி சீனிவாசன்

பாஜகவின் வளர்ச்சியை கண்டு திமுகவினர் பயப்படுகின்றனர்: வானதி சீனிவாசன்

பாஜகவின் வளர்ச்சியை கண்டு திமுகவினர் பயப்படுவதாக தமிழக பாஜக மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டத்திற்குப் பின் அவர் செய்தியாளர்களிடம், கூட்டணி கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பதை பாஜக தேசிய தலைமை முடிவு செய்யும். பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் வரும் மார்ச் 6ஆம் தேதி தேசிய தலைமையிடம் வழங்கப்படும்.

தோல்வி பயம் காரணமாகவே பிரதமரின் வருகையை திமுகவினர் விமர்சனம் செய்கின்றனர். ஒருபுறம் பிரதமர் திடடங்களை தர வேண்டும் என விரும்பும் திமுகவினர் மறுபுறம் பாஜக வளர்ச்சியை கண்டு பயப்படுகின்றனர். மக்கள் எங்களுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.

மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன. இது அதிமுகவிற்கும் பொருந்தும். கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுடன் விரைவில் பேச்சுவாத்தை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com