தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பில்லை: முதல்வர்

தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.3.2024) சென்னை, கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:

"திட்டங்களால் நீங்களும், தமிழ்நாடும் முன்னேற்றம் அடைவதுதான் திராவிட மாடல் அரசுக்கும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் பெருமை! இப்படி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய பல திட்டங்களை நாம் எவ்வளவோ செய்து கொண்டிருந்தாலும், ஆனால் அதே நேரத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்போ, நிதி உதவியோ இல்லாமல்தான் நாம் செய்து கொண்டு வருகிறோம்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
கப்பல்கள் மீது தொடரும் தாக்குதல்: அமெரிக்காவின் சூளுரை

தமிழ்நாட்டை வஞ்சிக்காத மாநிலங்களை மதிக்கின்ற மத்திய அரசு அமைந்தால் இன்னும் நிறைய செய்ய முடியும். அதற்கான காலம் கனிந்து கொண்டு இருக்கிறது. அதற்கு உங்கள் எல்லோருடைய ஆதரவும் தேவை; தயாராகிவிட்டீர்களா! நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்களை உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்! தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற விடியலின் ஒளியை இந்தியா முழுவதும் பரவிட வேண்டும் என்றால், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் அனைவரும் நல்ல முடிவெடுக்க வேண்டும்.

அதுவும் கொளத்தூர் தொகுதியில் நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இது கொளத்தூர் தொகுதி. என்னுடைய சட்டமன்ற தொகுதி, மன்னிக்க வேண்டும் நம்முடைய சட்டமன்ற தொகுதி. அப்படிப்பட்ட தொகுதியில் உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" எனத் தெரிவித்தார்.

கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ரூ.36.99 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.205.40 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com