

சென்னை: வரும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் மதிமுக இடையே தொகுதி உடன்பாடு இறுதிசெய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, தமிழகத்தில் தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை தொடங்கி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் மதிமுக இடையே ஒரு தொகுதி உடன்பாடு இறுதிசெய்யப்பட்டு வெள்ளிக்கிழமை (மார்ச்.8) அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்-வைகோ கையெழுத்திட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி உடன்பாடு இறுதிசெய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. எந்த தொகுதி என்பது குறித்து மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேசியபின் தெரியவிக்கப்படும்.
மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். மாநிலங்களவை தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருப்பதால் தற்போது அதுகுறித்து பேசவில்லை என வைகோ தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.