திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கையெழுத்தானது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டனர்.

அதன்படி மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் காங்கிரஸ் உடன் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. திமுக கூட்டணியில் ஐயூஎம்எல், கொமதேக, மதிமுகவுக்கு தலா ஒரு தொகுதி, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே தொகுதிப் பங்கீட்டை திமுக விறுவிறுப்பாக நடத்தி முடித்துள்ளது. ஜனவரி இறுதியில் கூட்டணிப் பேச்சுவார்த்தையை திமுக தொடங்கிய நிலையில் தொகுதிப் பங்கீடு தற்போது நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.

தி.மு.க கூட்டணி தொகுதிப் பங்கீடு:

(புதுவை உட்பட 40)

தி.மு.க..........21

காங்கிரஸ்...10

சி.பி.எம்........2

சி.பி.ஐ...........2

வி.சி.க...........2

ம.தி.மு.க.......1

இ.யூ.மு.லீ......1

கொ.ம.தே.க..1

மொத்தம்........40

ம.நீ.ம: மாநிலங்களவை சீட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com