
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்,
"தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று கட்சியை ஆரம்பித்தார் கமல்ஹாசன். ஆனால், தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளார்.
கமலஹாசனுக்கு இருக்க கூடிய நிர்பந்தம், மீண்டும் திமுகவுக்கு சென்று சரணடைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது முன்னதாகவே நடந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது நடந்துள்ளது. கமலஹாசன் திமுகவின் நிலைப்பாட்டில் தான் செல்ல வேண்டும் என்பது எனக்கு கவலை அளிக்கிறது.
ஜாபர் கைது வழக்கில், இன்னும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்களை எல்லாம் என்.சி.பி. அதிகாரிகள் கண்டுபிடித்து, தமிழக மக்கள் முன்னால் நிறுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு" எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.