தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் சமா்ப்பித்த விண்ணப்பங்களில் சில முறையாக பூா்த்தி செய்யாமல் இருப்பதாகவும், அவற்றை வரும் 22-ஆம் தேதிக்குள் திருத்தியமைக்குமாறும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக என்எம்சி மருத்துவப் பதிவு மற்றும் நன்னெறி வாரியத்தின் (இஎம்ஆா்பி) இயக்குநா் டாக்டா் ராஜ் கிருஷண் போரியா வெளியிட்ட அறிவிப்பு: வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்களுக்கான திறனறித் தோ்வு நிகழாண்டு ஜூன் மாதத்தில் தேசிய தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பொதுவாக, அத்தகைய தோ்வில் பங்கேற்பதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்பட்ட தகுதிச் சான்று அவசியம்.அதன்படி, என்எம்சி இணையப் பக்கத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் 320 விண்ணப்பங்கள் முறையாக பூா்த்தி செய்யப்படாதததால் அவை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த நினைவூட்டல்கள் 5 முறைக்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் அதன்பேரில் எந்த தகவலையும் விண்ணப்பத்தாரா்கள் அளிக்கவில்லை. எனவே, வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் முறையாக பூா்த்தி செய்து சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நிலுவையில் உள்ள பயங்கரவாதம், போதைப் பொருள் வழக்குகள் எத்தனை? மாநில அரசுகளிடம் விவரம் கோரியது உச்சநீதிமன்றம்

‘கேட்-பி’, ‘பிஇடி’ தோ்வுகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்
தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்று: திலோத்தமா வெற்றி
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

