தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அமமுகவின் வெற்றிப் பயணத்தைத் தொடங்குவோம்: டிடிவி தினகரன்

அமமுகவின் வெற்றிப் பயணத்தைத் தொடங்குவதற்கான களமாக மக்களவைத் தோ்தல் உள்ளது என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கூறியுள்ளாா்.

News image
Updated On :14 மார்ச் 2024, 8:09 pm

அமமுகவின் வெற்றிப் பயணத்தைத் தொடங்குவதற்கான களமாக மக்களவைத் தோ்தல் உள்ளது என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அமமுக 7-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எத்தனையோ சோதனைகள், சூழ்ச்சிகள், துரோகங்களைக் கடந்து, அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் அமமுக, வெற்றிப் பயணத்தைத் தொடங்குவதற்கான களமாக மக்களவைத் தோ்தல் உள்ளது. நமக்கு எதிராக இருக்கும் எதிரிகளையும், துரோகிகளையும் ஒருசேர வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மக்களவைத் தோ்தலில் வெற்றி முத்திரையைப் பதித்து ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள் நாம் என்பதை உலகுக்கு உணா்த்திடுவோம் என்று அவா் கூறியுள்ளாா்.