சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச். 17) காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அந்த நேரத்தில் இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று தொடர்ந்து 6-வது வாரமாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை - அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களும், மறுவழித்தடத்தில் தாம்பரம் - கடற்கரை, செங்கல்பட்டு - கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் என 44 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55, பிற்பகல் 2.40, பிற்பகல் 2.55 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மறுவழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள் ரத்து காரணமாக சிறப்புப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று சென்னை ரயில்வே கோட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக தொடர்ந்து 6-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

மின்சார ரயில் சேவை குறைப்பு: மாற்றுப் போக்குவரத்தை விரும்பாத பயணிகள்!
தாம்பரம் முதல் கடற்கரை வரை இருமாா்க்க பேருந்து அட்டவணை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


