நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாஜக நேசிக்கிறது, திமுக வஞ்சிக்கிறது: மோடி

தமிழ் சகோதர, சகோதரிகளே என்று கூறி கன்னியாகுமரியில் உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி

News image
Updated On :15 மார்ச் 2024, 6:45 am

DIN

கன்னியாகுமரி வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ், சகோதர, சகோதரிகளே என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.

கன்னியாகுமரிக்கு இன்று காலை வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி அரங்கில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்.

பிரதமர் மோடி பேசுகையில், வ.உ.சி. துறைமுகம், மீனவர்களுக்கு தற்போது பயனுள்ளதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கா ரூ.15,000 கோடியில் புதிய ரயில்வே திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழக மக்களை பாஜக தான் நேசிக்கிறது. திமுக - காங்கிரஸ் கட்சிகள் வஞ்சிக்கின்றன. திமுக - காங்கிரஸ் இந்தியா கூட்டணியால், மக்களுக்கு வளர்ச்சித்திட்டங்களைக் கொடுக்க முடியாது. குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும். கொள்ளையடிப்பதை இலக்காகக் கொண்டது திமுக கூட்டணி என்று பிரதமர் மோடி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.