காலமானார் எஸ்.நேரு

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.நேரு காலமானார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.நேரு.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.நேரு.

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க வட்டத் தலைவருமான எஸ்.நேரு (59) இருதய நோய் காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனயில் சில நாள்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து, தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் வியாழக்கிழமை இரவு காலமானார்.

இறந்த நேருவுக்கு லதா என்ற மனைவியும்,ரோசிணி என்ற மகளும் உள்ளனர். நேருவின் இறுதி ஊர்வலம் நீடாமங்கலம் தாவுதுராயன் சந்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு புறப்படும்.

இறந்த நேரு நீடாமங்கலம் பல்நோக்கு சேவைமைய ஒருங்கிணைப்பாளராகவும், நீடாமங்கலம் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப் பாளராகவும், கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகளில் ஒருவராகவும் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சமூக சேவையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறந்த நாடக நடிகருமாவார்.

தொடர்புக்கு: 9444473637.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com