மக்களவைத் தேர்தலில் போட்டியிட மார்ச். 19 முதல் விரும்ப மனு: தேமுதிக

மார்ச். 19 முதல் விரும்ப மனு: தேமுதிக அறிவிப்பு
கோப்புப்படம்
கோப்புப்படம்

மக்களவைத் தேர்தலில் போட்டியிட மார்ச். 19 முதல் விரும்ப மனு விநியோகிக்கப்படும் என்று தேதிமுக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புவர்கள் மார்ச். 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

கோப்புப்படம்
ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முயற்சிக்கலாமா? - கமல்ஹாசன்

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை மார்ச் 20 ஆம் தேதி 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் ஓப்படைக்க வேண்டும்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் விருப்ப மனு கட்டனமாக பொதுத் தொகுதிக்கு ரூ.15,000 மற்றும் தனித்தொகுதிக்கு ரூ.10,000 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மார்ச் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைக் கழகத்தில் நேர்காணம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com