10 ஆண்டுகளுக்குப் பிறகு.. முக்கிய தொகுதியில் களமிறங்கும் திமுக

10 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய தொகுதியான கோயம்பத்தூரில் களமிறங்குகிறது திமுக.
10 ஆண்டுகளுக்குப் பிறகு.. முக்கிய தொகுதியில் களமிறங்கும் திமுக

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கோயம்பத்தூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளரை நிறுத்தவிருக்கிறது.

கடைசியாக கோயம்பத்தூர் மக்களவைத் தொகுதியில் 1980 மற்றம் 1996களில்தான் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 1998 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் தோல்வியைத் தழுவியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் 2019ஆம் ஆண்டு வெற்றி பெற்றது. ஆனால், திமுக இந்த முறை கோவையை தன்பக்கம் வைத்துக்கொண்டுள்ளது. கோவையின் திமுக வரலாற்றை மாற்றியமைக்கும் வகையில், உதயநிதி ஸ்டாலின், கோவையின் தேர்தல் பிரசார வியூகங்களை தலைமைதாங்கி நடத்துவார் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10 ஆண்டுகளுக்குப் பிறகு.. முக்கிய தொகுதியில் களமிறங்கும் திமுக
தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

எதிர்க்கட்சியான அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கோவை தொகுதியை திமுக வழக்கமாக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும். 2014ஆம் ஆண்டு அதிமுக 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் மூன்றாவது இடத்தையே பிடித்தார். அதாவது 1996ஆம் ஆண்டு முதலே பாஜகவுக்கும் கோவையில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு வாக்குவாங்கி உள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் கூட, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை இழந்தபோதும், கோவைக்கு உள்பட்ட சூலூர், தெற்கு கோவை, வடக்குக் கோவை, சிங்கநல்லூர் உள்ளிட்ட ஆறு பேரவைத் தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னமே வெற்றி பெற்றிருந்தது. இப்பகுதியில் 10 தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்றிருந்தது. தற்போது பல்லடம், திருப்பூர் மாவட்டங்களும் கோவை மக்களவைத் தொகுதிக்குக் கீழே வருகின்றன.

கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக, 10 தொகுதிகளில் 9 தொகுதிகளை வென்றிருந்தது. திமுக வெறும் சிங்காநல்லூர் தொகுதியை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், அக்கட்சி கோவையில் தனது பலத்தை பலப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டது. அதன் எதிரொலியாகவே, 2022ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றது. கோவையின் பொறுப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இதில் முக்கியப் பங்காற்றினார். ஆனால், தற்போது வேலை வாய்ப்பு மோசடி வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாலாஜி தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ளார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு.. முக்கிய தொகுதியில் களமிறங்கும் திமுக
தென் இந்தியாவின் உ.பி.யா, தமிழ்நாடு?

இந்த நிலையில், கோவையின் தோல்வி வரலாற்றை உடைப்பதில் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. எனவே, இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இங்கு தீவிர பிரசாரத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோல, கோவையில், பாஜகவும் ஒரு பலம் பாய்ந்த வேட்பாளரையே நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒரு தொகுதியை எடுத்துக்கொண்டால், இவ்விரு கட்சிகளின் பலமும், பலவீனமும் வெவ்வேறாக உள்ளன. கோவையில் தனது முழு பலத்தையும் நிரூபிக்கும் நிலையில் திமுக உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து கோவையை பெற்றக்கொண்டு மாறாக திண்டுக்கல் தொகுதியை ஒதுக்கியிருக்கிறது. இங்கு கடந்த 2019ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க., நகர மாவட்டச் செயலர் என்.கார்த்திக், செய்தியாளரிடம் பேசுகையில், 'கோவைக்கு தமிழக அரசு செய்திருக்கும் செயல் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களைல், தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு பல மடங்கு அதிகரித்துள்ளது. நாங்கள் நேரடியாக தொகுதியில் போட்டியிட உள்ளதால், தொண்டர்கள் மத்தியில் அமோக உற்சாகமும் ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதை உயர்நிலைக்குழு ஏற்றுக்கொண்டு திமுக வேட்பாளரை களமிறங்க வைக்கிறது. கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 21 நிர்வாகிகள் விண்ணப்பித்துள்ளனர். யார் களமிறக்கப்பட்டாலும் அபாரமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com