எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தஞ்சாவூர் திமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2024, 7:08 am

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக ச. முரசொலி அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெயர் - ச.முரசொலி

பிறப்பு - 26.6.1978

படிப்பு - பி.எஸ்ஸி., பி.எல்.

பெற்றோர் - கே. சண்முகசுந்தரம் - தர்மசம்வர்த்தினி.

குடும்பம் - மனைவி எஸ். பொற்செல்வி, மகன் - ஆதவன்.

ஊர் - தென்னங்குடி, தஞ்சாவூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

இவர் இயற்பியல் இளங்கலை பட்ட படிப்பை தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியிலும், இளங்கலை சட்டப் படிப்பை பெங்களூரு ராம் மனோகர் லோகியா சட்டப் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.

இவர் 2006 – 2011 வரை தஞ்சாவூர் திமுக ஒன்றியக் குழு உறுப்பினராகவும், 2014 - 2020 வரை திமுக பொதுக்குழு உறுப்பினராகவும், 2020-இல் தஞ்சாவூர் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, 2022-இல் நடைபெற்ற திமுகவின் 15-ஆவது அமைப்புத் தேர்தலில் தஞ்சை வடக்கு ஒன்றியக் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரது தாத்தா எஸ். கந்தசாமி, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் இயக்குநராகவும், தந்தை சண்முகசுந்தரம் 1971-ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத் தலைவராகவும், தென்னங்குடி தொடக்க வேளாண்மை சங்கத் தலைவராகவும் பதவி வகித்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.