சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சனிக்கிழமை (மாா்ச் 23) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06051) மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமாா்க்கமாக திருநெல்வேலியில் இருந்து திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06052) மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும். இதில் 20 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், இரு பொதுப் பெட்டிகளும் இணைக்கப்படும் என்றும் இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாகவும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கம்

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
ஹூப்ளி - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

சென்னை - திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


