400 கிலோ கறி... 2000 வீட்டுக்கு பார்சல் செய்யப்பட்ட பிரியாணி!

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது.
400 கிலோ கறி... 2000 வீட்டுக்கு பார்சல் செய்யப்பட்ட பிரியாணி!

வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13-வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

நேற்று(சனிக்கிழமை) மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில், நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது.

இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது.

ரம்ஜானை முன்னிட்டு அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com