எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனு நிறுத்திவைப்பு!

இரட்டை வாக்காளர் பிரச்னை எழுப்பப்பட்டதால் வேட்பாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

News image
சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி
Updated On :28 மார்ச் 2024, 6:42 am

DIN

சேலம் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகத்தில் தொகுதிகளிலும் மார்ச் 20இல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

நேற்று மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 1,403 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலைமுதல் பெறப்பட்ட வேட்புமனுக்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.

சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனு பரிசீலனையின் போது, இரட்டை வாக்காளர் பிரச்னை எழுப்பப்பட்டதால், விளக்கம் கொடுக்கும் வரை பரிசீலனை நிறுத்தி வைப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.