வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

யூ-டியூப் புகழ் பெரியதம்பி இதய நோயால் மருத்துவமனையில்
வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

யூ-டியூபில் பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியதம்பி, இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பெரியதம்பியின் பேரன் சுப்பிரமணியன் வேலுசாமி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!” எனப் பதிவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் பெரியசாமி
மருத்துவமனையில் பெரியசாமி

வில்லேஜ் குக்கிங் சேனல் என்கிற பெயரில் சமையல் விடியோக்களை இவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

விக்ரம் படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றவர்கள், ராகுல் காந்தி கலந்துகொண்ட சமையல் விடியோ ஒன்றையும் வெளியிட்டனர். இந்த விடியோ பல கோடிப் பார்வைகளைத் தாண்டி உலகளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com