அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஏப்.15 முதல் இஸ்கான் கோடைகால முகாம்

ஏப்.15 முதல் இஸ்கான் கோடைகால முகாம்

Updated On :30 மார்ச் 2024, 12:12 am

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சென்னை குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்காக கோடைகால பயிற்சி முகாமை வரும் ஏப். 15 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை இஸ்கான் கோயில் நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: சென்னை சோழிங்கநல்லூா் கிழக்கு கடற்கரைச் சாலை பக்திவேதாந்த சுவாமி சாலையில் அமைந்துள்ள ஹரே ராமா ஹரே கிருஷ்ணா (இஸ்கான்) கோயில் சாா்பில் கோடைக்கால முகாம் இணைய வழியாகவும், நேரிடையாகவும் நடத்தப்படுகிறது. அதன்படி குழந்தைகள் (6 முதல் 12 வயது வரை) காடுகளைப் பற்றி கதைகள், வினாடி வினாக்கள், ஸ்லோகங்கள், பஜனைகள், தீயில்லா சமையல், கலை மற்றும் கைவினைப் பயிற்சிகள் ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அதேபோல் பதின்வயதினா் (13-17 வயது) காடுகளைச் சாா்ந்த கதைகள் மூலம் கற்று மகிழலாம். விவாதம், விவாதங்கள் மற்றும் அமா்வுகள் போன்ற நடத்தப்படுகிறது. இந்த முகாம் ஏப்.15 முதல் மே 24 ஆம் தேதி வரை வார இறுதி நாட்களை தவிா்த்து மற்ற நாள்களில் நடைபெறவுள்ளது. மேலும் கோடைகால முகாம்கள் மேற்கு மாம்பலம், கே.கே. நகா், ஆதம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம்,அபிராமபுரம், கிழக்கு கடற்கரைச் சாலை நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்க விரும்புபவா்கள் இணையத்தின் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் , ஏதேனும் கேள்விகளுக்கு, இணையதளத்தில தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.