பரமத்திவேலூரில் சாலையின் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் பலி


பரமத்திவேலூரில் சாலையின் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் பலியானார்.
கரூர் வெங்கமேடு அருகே வாங்கப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் கௌதமன் (27). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அருகே திருமணம் செய்துள்ளார். கௌதமன் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசனின் உறவினர் ரம்யா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கௌதமன் ஜேசிபி இயந்திரம் வைத்து ஒப்பந்த பணிகளை செய்து வந்தார். கௌதமனின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்து 40 நாட்களே ஆகிறது.
மனைவியையும் ,குழந்தையையும் பார்ப்பதற்காக வெள்ளிக்கிழமை கௌதமன் இரு சக்கர வாகனத்தில் திருச்செங்கோடு சென்று விட்டு அங்கு மனைவியையும், பெண் குழந்தையும் பார்த்துவிட்டு மீண்டும் திருச்செங்கோட்டில் இருந்து கரூர் வாங்கபாளையம் செல்வதற்காக பரமத்திவேலூரில் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார் . அப்போது அனிச்சம் பாளையம் பிரிவு சாலை அருகே நிலை தடுமாறி இடது புறத்திலிருந்த சாலை தடுப்பில் மோதியதில் படுகாயமடைந்தார்.
அதைபார்த்த அவ் வழியாக வந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கௌதமனை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கௌதமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கௌதமின் உடலை உடற்கூறாவிற்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...