திமுகவும், பாஜகவும் ஆபத்தானவர்கள்: நடிகை விந்தியா

திமுகவும், பாஜகவும் ஆபத்தானவர்கள்: நடிகை விந்தியா

திமுகவும், பாஜகவும் ஆபத்தானவர்கள் என்று நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து நடிகர் விந்தியா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனையும், ஓபிஎஸ் ஐயும் பயங்கரமாக அசிங்கப்படுத்துகிறார்கள். எவ்வளவு மரியாதையோடு வாழ்ந்தவர்கள் அவர்கள். நீங்கள் எல்லாம் யோசித்துப் பாருங்கள். இவர்கள் மக்களுக்காக கூட்டணி சேர்ந்து இருக்கிறார்களா? என்று. அவர்களின் சுயநலத்திற்காக, அவர்களின் வாரிசுகளுக்காக, அவர்களுடைய ஆதாயத்திற்காக கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள். தயவு செய்து பாஜக கூட்டணியை நம்பாதீர்கள். திமுகவிற்கும் பாஜகவிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

திமுக பயங்கரமாக பொய் சொல்லும். பாஜக, சொல்ற பொய்யை, பயங்கரமாகச் சொல்லும். திமுக, திராவிட மாடல் என ஏமாற்றும். பாஜக, இந்தியா மாடல் என ஏமாற்றும். திமுக, கடவுளை திட்டிக்கிட்டே சாமி கும்பிடும். பாஜக, கடவுளே திட்ற அளவிற்கு சாமி கும்பிடும். ஸ்டாலின், மகனைப் பற்றி மட்டுமே யோசிப்பார். மோடி, மதத்தைப் பற்றி மட்டுமே யோசிப்பார். மனைவி, மகன், மருமகளுக்கு, ஸ்டாலின் பினாமி. அம்பானி, அதானிக்கு மோடி பினாமி. பாஜகவும், திமுகவும் ஆபத்தானவர்கள். மக்களுக்கு இரண்டு பேருமே தேவை இல்லை. தேர்தல் வந்தால் போதும், மக்களை ஏமாற்றுவதற்காக திமுக நிறைய பேசுவார்கள். இஷ்டத்திற்கு தேர்தல் அறிக்கை எல்லாம் தருவார்கள்.

ரூபாய்க்கு 500 சிலிண்டர் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் சிலிண்டரில் கேஸ் இருக்காது. 75 ரூபாய்க்கு பெட்ரோல் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் அரை லிட்டர் தான் தருவார்கள். 65 ரூபாய்க்கு டீசல் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் தகுதியான ஓட்டுநர்களுக்கு மட்டுமே தருவோம் என்பார்கள். தேர்தல் சமயத்தில் மக்களை ஏமாற்ற, திமுக என்ன வேண்டும் என்றாலும் பேசும். தேர்தலுக்கு முன்னாடி திமுக ஒரு மாதிரி பேசுவாங்க. தேர்தலுக்குப் பின்னாடி திமுக ஒரு மாதிரி பேசுவாங்க. தேர்தல் சமயத்தில் ஓட்டு மட்டும் பற்றியே திமுகவினர் கவலைப் படுவார்கள். தேர்தல் முடிஞ்ச பிறகு, அவங்க வீட்டை மட்டும் பற்றியே கவலைப்படுவார்கள். எனப் பேசி, நடிகை விந்தியா, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com