சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்


5 நாட்கள் பயணமாக குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை திரும்பினார்.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்.19-இல் நடந்தது. அதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
இதனிடையே, வெயிலின் தாக்கம் சென்னையில் அதிகம் உள்ள நிலையில், முதல்வா் ஸ்டாலின் குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு கடந்த 19ஆம் தேதி சென்றார்.
இந்த நிலையில் 5 நாட்கள் கொடைக்கானல் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் நாளைதான் (மே 4ம் தேதி) சென்னை திரும்புவார் என தகவல் வெளியானது.
ஆனால் அவர் ஒருநாள் முன்னதாகவே இன்று சென்னை திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...