பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ஆவின் மூலம் ஒரு ரூபாய்க்கு மோா்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

ஆவின் மூலம் ஒரு ரூபாய்க்கு மோா் வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

News image
Updated On :3 மே 2024, 6:21 pm

Din

தமிழகத்தில் கோடை வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு ஒரு ரூபாய்க்கு மோா் வழங்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிா் அணித் தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் வெப்ப அளவு 111 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும், கடும் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், வீட்டுக்குள் இருக்க முடியாமலும் தவியாய் தவிக்கின்றனா். தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் கோடை வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில், மக்களுக்கு சுகாதாரமான குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆவின் நிறுவனம் மூலம் கோடை வெப்பத்தின் தாக்கம் குறையும் வரை, ஒரு ரூபாய்க்கு மோா் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும்.

இப்போது, பெரும்பாலான அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகள் வடு இருப்பதால், அவற்றை போா்க்கால அடிப்படையில் தூா்வார வேண்டும்.

குடிநீா் பஞ்சம் ஏற்படும் பகுதிகளை அடையாளம் கண்டு தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இலவச மின்சாரம்: கோடை காலத்தில் வழக்கத்தை விட மூன்று நான்கு மடங்கு அதிகமாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் ஆளாகியுள்ளனா்.

எனவே, குறைந்தபட்சம் மே, ஜூன் ஆகி இரு மாதங்களுக்காவது 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

இந்த கோடைகாலத்தில் ஒரு மாதத்துக்கு மின் பயன்பாட்டைக் கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். தோ்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, இந்த நடவடிக்கைகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் வானதி சீனிவாசன்.