கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படுவதையே ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கையாக விடுக்கப்படுகிறது.

அதன்படி, கேரளம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ‘கள்ளக்கடல்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி சிவப்பு எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (ஐஎன்சிஓஐஎஸ்) மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் ஆகியவை வெள்ளிக்கிழமை விடுத்தன.

இந்த அறிவிப்பை தற்போது ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையாக தளா்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில், நாளை(மே.6) மாலை வரை ராட்சத அலைகள் எழும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பெருங்கடல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11:30 முதல் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் அபாய பகுதியில் இருந்து மக்கள் விலகியிருக்க எச்சரித்துள்ளது.

தென் தமிழக கடற்கரைப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் 0.5 மீட்டா் முதல் 1.8 மீட்டா் வரை எழ வாய்ப்புள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com