தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னையில் திடீர் மழை!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை லேசான மழை பெய்யும்.

News image
கோப்புப்படம்
Updated On :9 மே 2024, 5:11 am

DIN

சென்னையில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை காலை திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோயம்பேடு, அரும்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, மாடம்பாக்கம், செம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை 10 மணி முதல் லேசான மழை விட்டுவிட்டு பெய்து வருகின்றது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முதலே வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்ததால், பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் புதன்கிழமை காலை முதல் லேசான மழை பெய்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்தது.

மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி ஆகிய 10 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.