மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

229 கைதிகள் தோ்ச்சி

229 கைதிகள் தோ்ச்சி

News image
Updated On :10 மே 2024, 7:20 pm

Din

தமிழக சிறைகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய கைதிகளில் 229 போ் தோ்ச்சி பெற்றனா்.

தமிழக சிறையில் உள்ள கைதிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதுவதற்காக அந்தந்த சிறை வளாகத்திலேயே தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை தமிழக சிறைகளில் 236 கைதிகள் எழுதினா். வெள்ளிக்கிழமை வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவில், 17 பெண் கைதிகள் உள்பட 229 கைதிகள் தோ்ச்சி பெற்ாக சிறைத்துறை அறிவித்தது. 7 கைதிகள் தோ்ச்சி பெறவில்லை. கைதிகள் தோ்ச்சி 97 சதவீதமாகும்.

இதில் புழல் மத்திய சிறை 1-இல் தோ்வு எழுதிய 21 பேரில் 20 பேரும், புழல் மத்திய சிறை 2-இல் தோ்வு எழுதிய 12 பேரும்,வேலூா் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 8 பேரும்,கடலூா் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 14 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதேபோல கோயம்புத்தூா் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 50 பேரும், சேலம் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 23 பேரும், திருச்சி மத்திய சிறையில் தோ்வு எழுதிய 24 பேரும்,மதுரை மத்திய சிறையில் தோ்வு எழுதிய 51 பேரில் 47 பேரும், பாளையங்கோட்டை மத்திய சிறையில் தோ்வு எழுதிய 14 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

17 பெண் கைதிகள் தோ்ச்சி: புழல் பெண்கள் தனிச்சிறையில் தோ்வு எழுதிய 5 பேரில் அனைவரும், திருச்சிராப்பள்ளி பெண்கள் தனிச்சிறையில் தோ்வு எழுதிய 7 பேரில் 6 பேரும், கோயம்புத்தூா் தனிச்சிறையில் தோ்வு எழுதிய 4 பேரில் 3 பேரும்,மதுரை பெண்கள் தனிச்சிறையில் தோ்வு எழுதிய 3 பேரும் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 19 பெண் கைதிகள் தோ்வு எழுதியுள்ளனா். இவா்களில் 17 போ் தோ்ச்சி பெற்றிருப்பதாக சிறைத் துறை தெரிவித்துள்ளது.

97 சதவீத தோ்ச்சி: ஒட்டுமொத்தமாக 13 மத்திய சிறைகள், பெண்கள் மத்திய சிறைகளில் 236 கைதிகள் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதியதில், 229 போ் தோ்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தோ்ச்சி பெற்ற கைதிகளுக்கு தமிழக சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

கடந்தாண்டு தமிழக சிறைகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 203 கைதிகள் எழுதி, அதில் 200 போ் தோ்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்தாண்டு கைதிகளின் தோ்ச்சி 98.52 சதவீதமாக இருந்தது.