மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு! மதுரை நகைக்கடை திருட்டு! இருவர் கைது! திருடனை அடையாளம் கண்டது எப்படி?விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழகம்: டிடிவி தினகரன் விமர்சனம் மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்தத் தவறை மட்டும் செய்ய வேண்டாம்!மைக்ரோசாஃப்ட் சேவைகள் மீண்டன! இணையவழி தாக்குதல்கள் ஏதும் இல்லை!மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைப்பு

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் ஆசிரியர் உள்ளிட்டோர் கைது.

கொலை செய்யப்பட்ட வெங்கடேசன்

Updated On :

ஊத்தங்கரை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 54. இவருக்கு லக்ஷ்மி (48) என்கிற மனைவியும் சந்தோஷ் (20), சந்திரகுமார் (16) ஆகிய மகன்களும் உள்ளனர்.

சந்தோஷ் பி.டெக் படித்து வருகிறார். சந்திரகுமார் பிளஸ் 2 முடித்துள்ளார். வெங்கடேசன் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடமும் பல லட்சம் பணம் பெற்றுள்ளார். இந் நிலையில் இவரின் உறவினரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சுன்னாலம்பட்டியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியர் கணேசன் என்பவர் அரசு வேலைக்காக பலரிடமும் பணம் பெற்று சுமார் 12 கோடி ரூபாய் வெங்கடேசனிடம் கொடுத்துள்ளார்.

பணம் பெற்றுக் கொண்ட வெங்கடேசன் பணி நியமன ஆணைகளை கணேசனிடம் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் வேலையில் சேரும்போது அது போலியான ஆணை என்பது தெரிய வந்தது. இது குறித்து பணம் கொடுத்தவர்கள் கணேசனிடம் கூறியுள்ளனர்.

வெங்கடேசனிடம் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு ஆசிரியர் கணேசன் பலமுறை அலைந்துள்ளார். வெங்கடேசன் பணம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் வெங்கடேசன் தன்னுடைய இளைய மகனை நீட் தேர்விற்காக தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதற்காக சென்னையில் விட்டு விட்டு நிலம் கிரயம் தொடர்பாக சேலம் செல்வதாக கூறியுள்ளார். அவருடைய மகன்கள் செல்போனில் தொடர்பு கொண்ட போது வெங்கடேசன் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது.

வெங்கடேசன் வீடு திரும்பாததால் அவருடைய மகன் தங்களுடைய தந்தை காணவில்லை என்று குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின்படி குன்றத்தூர் காவல்துறை ஆய்வாளர் வேல் மற்றும் காவலர்கள் ஆசிரியர் கணேசனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ் குப்பத்தில் உள்ள தனது அண்ணன் குமரேசன் என்பவருக்கு சொந்தமான கிரஷரில் வைத்து அடித்ததில் வெங்கடேசன் இறந்து விட்டதாகவும் இறந்த வெங்கடேசன் உடலை கிரசருக்கு அருகிலேயே புதைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து குன்றத்தூர் போலீசார் ஊத்தங்கரை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் ஊத்தங்கரை காவல்துறை நேற்று இரவு கிரஷரில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். இன்று காலை குன்றத்தூர் காவல்துறை கீழ் குப்பம் பகுதியில் அமைந்துள்ள கிரஷருக்கு ஆசிரியர் கணேசன் உள்ளிட்ட மூவரை அழைத்து வந்தனர். கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் மனைவி லட்சுமி, அவருடைய மகன்களும் வந்தனர். சம்பவ இடத்திற்கு ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் காவல் ஆய்வாளர் கந்தவேல், ஊத்தங்கரை தாசில்தார் திருமால், வருவாய் ஆய்வாளர் கெஜலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆசிரியர் கணேசன் இறந்த வெங்கடேசன் புதைத்த இடத்தை காட்டினார்.

அதிகாரிகள் அந்த இடத்தில் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் தோண்டினர். பின்னர் வெங்கடேசன் நின்ற நிலையில் புதைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரவீனா - சதீஷ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே உடல்கூறாய்வு மேற்கொண்டனர். உடல் கூறாய்வுக்கு பின் வெங்கடேசன் உடலை அவருடைய மனைவியிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை அருகே கலிகுளத்தில் உள்ள வெங்கடேசனுடைய ஊருக்கு எடுத்துச் செல்வதாகக் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.