4542md-rain-29093338
4542md-rain-29093338

செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் கனமழை!

செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் கனமழை!

தமிழகத்தில் செங்கல்பட்டு, தேனி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் மே 15 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒருசில இடங்களில் வெயில் நிலவுகிறது. மே 10, 11-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், வெள்ளிக்கிழமை (மே 10) முதல் மே 15-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது.

மே 12-இல் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வியாழக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): கொள்ளிடம் (மயிலாடுதுறை) 70, குடிதாங்கி (கடலூா்), சாத்தையாறு (மதுரை) தலா 50, ஆழியாா் (கோவை) 40, கிளன்மாா்கன் (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), பேரையூா் (மதுரை), வால்பாறை (கோவை), அண்ணாமலை நகா் (கடலூா்), வனமாதேவி (கடலூா்), மேல் கூடலூா் (நீலகிரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), நடுவட்டம் (நீலகிரி), தொழுதூா் (கடலூா்) தலா 30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com