சென்னை வானில் தெரிந்த சர்வதேச விண்வெளி மையம்! யார் பார்த்தீர்கள்?

சென்னையின் விண்வெளி அதிசயம்: வானில் விண்வெளி மையம் தோன்றியது
சிவப்பு வட்டமிடப்பட்ட பகுதியில் ஒளிரக்கூடியதாக தென்பட்ட ஐஎஸ்எஸ் மையம்
சிவப்பு வட்டமிடப்பட்ட பகுதியில் ஒளிரக்கூடியதாக தென்பட்ட ஐஎஸ்எஸ் மையம்
Published on
Updated on
1 min read

விண்வெளியில் ஒளிரக்கூடிய ஒன்றை இரவு 7 மணியளவில் நீங்கள் வானில் பார்த்திருந்தால் அது சர்வதேச விண்வெளி மையமாக (ஐஎஸ்எஸ்) இருக்கலாம்.

ஆம், நாசா சொல்வதுபோல மூன்றாவது ஒளிரக்கூடிய பொருளாக வானில் தெரிகிற இந்த சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் நம்மால் பார்க்க முடியும்.

சென்னையில் பல இடங்களில் வெள்ளிக்கிழமை 7.09 மணிக்கு வானில் இதனை பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ 7 நிமிடங்களுக்கு வானில் தெரிந்துள்ளது. தென்வடக்கு மேலாக 10 டிகிரியில் தோன்றி வடக்கு- வடகிழக்குக்கு 10 டிகிரி மேலாக மறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை பார்க்க தவறினால் சனிக்கிழமை காலை 5.02 மணிக்கு வானில், ஆறு நிமிடங்கள் அளவில் விண்வெளி மையம் ஒளிரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது நமது பகுதியில் விண்வெளி மையம் தெரியும் என்பது குறித்து அறிந்து கொள்ள நாசாவின் ‘ஸ்பாட் தி ஸ்டேஷன்’ என்கிற இணையத்தளத்தை அணுகலாம்.

சூரிய ஒளி படும்போது இந்த விண்வெளி மையம் ஒளிர்வதாகவும் அதனால் மாலை அல்லது அதிகாலை நேரங்களில் தென்படுவதாகவும் நாசா குறிப்பிடுகிறது.

விண்வெளி ஆய்வுக்காக உருவாக்கப்பட்ட இந்த விண்வெளி மையம் 2023-ல் ஓய்வு பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com