
Updated On :10 மே 2024, 7:27 pm

மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசனை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் வியாழக்கிழமை (மே 9) சந்தித்தாா்.
மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தாா். சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவளவனையும், விழுப்புரம் தொகுதியில் பொதுச் செயலா் ரவிக்குமாரையும் ஆதரித்து பிரசாரம் செய்தாா்.
இந்த நிலையில், ஆழ்வாா்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து, தங்களை ஆதரித்து பிரசாரம் செய்ததற்காக இருவரும் நன்றி கூறினா்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் கமல்ஹாசனுடன், திருமாவளவன் பேசினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...