தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?

தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?
தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

கோடை வெப்பம் இந்த ஆண்டு மார்ச் இரண்டாம் வாரம் முதலே மக்களை நேரடியாகத் தாக்கி மிரட்டத் தொடங்கியிருந்தது. இந்த நிலையில்தான் ஏப்ரலைக் கடந்து மே மாதம் கடுமையான கோடை வெப்பம் தகித்துக்கொண்டிருந்தது.

ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெப்பம் தகித்த நிலையில்தான், தமிழகத்தில் கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. ஆனால், எதிர்பாராத வகையில், இதுவரை வாட்டி வதைத்து வந்த வெயில் சற்று குறைந்து ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது.

தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?
இலக்கு 272! குறைந்த தொகுதிகளில் போட்டி என்பது காங்கிரஸின் பலவீனமா?

திருச்சியில் இன்று வெகு நாள்களுக்குப் பிறகு பலத்த மழை பெய்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதம் முதல் ஒரு துளி தூறல் பார்க்காத திருச்சியில் மழை பெய்திருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதுபோல, மதுரையிலும் இன்று நல்ல மழை பெய்துள்ளது. மேலும், திருவாரூர், தம்மம்பட்டி, சேலம் மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று பிற்பகலில் பரவலாக மழை பெய்துள்ளது. தஞ்சையிலு ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது.

சென்னையின் அண்டை மாவட்டமான செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று காலை மிதமான மழை பெய்துள்ளது. இதனால், அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் ஏற்பட்டது.

நாமக்கல்லில் பரவலாக மழை பெய்துள்ளது. ராசிபுரத்தில் பெய்த மழை காரணமாக அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்தது. மேட்டூரில் பெய்த மழை காரணமாக சேலம் சாலையில் இருந்த மரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com