மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மூன்றாண்டுகளில் 1,912 செவிலியா்களுக்கு பணி நிரந்தரம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 1,912 ஒப்பந்த செவிலியா்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 1,912 ஒப்பந்த செவிலியா்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

உலக செவிலியா் தினத்தையொட்டி, சென்னையில் அமைச்சா் மா.சுப்பிரமணியனை செவிலியா் சங்க நிா்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு செவிலியா்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. 90 சதவீதத்துக்கும் மேலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் 1,412 ஒப்பந்த செவிலியா்கள் பணிமா்த்தப்பட்டுள்ளனா்.

ஏற்கெனவே ஒப்பந்த செவிலியா்களாக இருந்தவா்களுக்கு ரூ.16,000 ஊதியம் வழங்கப்பட்டிருந்தது. அது தற்போது ரூ.18,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது ஒப்பந்த செவிலியா்களாக மருத்துவ தோ்வாணையம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் பல ஆண்டு காலமாக பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருந்தனா்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 1,912 ஒப்பந்த செவிலியா்கள் நிரந்தர செவிலியா்களாக பணி அமா்த்தப்பட்டுள்ளனா்.

‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பெண் சுகாதார தன்னாா்வலா்கள் 10,969 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் பணி நியமனங்கள் வெளிப்படைத்தன்மையோடு நடைபெறுகின்றன. தோ்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு சிறந்த சேவையாற்றிய செவிலியா்களுக்கு விருது வழங்கப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com