பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?

ஏதேனும் ஒரு பாடத்தில் சதம் அடித்த மாணவர்களின் எண்ணிக்கை 8,418.
பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்டுள்ளது.

தேர்வு எழுதிய 8,11,172 மாணவ, மாணவிகளில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 91.17%. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதியவர்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் நூறு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 8,418 ஆகும்.

அதிகபட்சமாக கணினி அறிவியலில் 3,432 பேரும், குறைந்தபட்சமாக தாவரவியலில் 2 பேரும் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

பாடவாரியாக விவரம்:

தமிழ் - 8

ஆங்கிலம் - 13

இயற்பியல் - 696

வேதியியல் - 493

உயிரியல் - 171

கணிதம் - 779

விலங்கியல் - 29

வணிகவியல் - 620

கணக்கு பதிவியல் - 415

பொருளியல் - 741

கணினிப் பயன்பாடு - 288

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 293

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com