48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்
/

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

News image
Updated On :15 மே 2024, 12:42 pm

தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 19-ஆம் தேதி வரை கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையர் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், அனைத்து துறைகளும் தயாராக இருக்கவும், அசம்பாவிதம் நேரிட்டால் பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (மே. 15) மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.