தேசிய பசுமைத் தீா்ப்பாயம்
தேசிய பசுமைத் தீா்ப்பாயம்

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடா்பாக சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என கேரள அரசுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி எழுப்பியது.

திருப்பூா், கரூா் மாவட்டங்களின் வேளாண் பாசனத்துக்கும், பல லட்சம் மக்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் அமராவதி ஆற்றுப்படுகை விளங்குகிறது. அமராவதி அணைக்கு நீா் ஆதாரமாகத் திகழும் சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமராவதி அணையின் முக்கிய நீா் ஆதாரங்களாக கேரள மாநிலம் சட்டமூணாா் பகுதியில் உள்ள பாம்பாறு, மேற்குத் ெ தாடா்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும் தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன.

இந்நிலையில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் வட்டம் வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக நாளிதழ்களில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

வழக்கு விசாரணையின்போது, சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடா்பாக சுற்றுச்சூழல் துறை, தேசிய வன விலங்குகள் வாரியத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என தென்மண்டல பசுமைத் தீா்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, உறுப்பினா் சத்தியகோபால் அமா்வு கேரள அரசுக்கு கேள்வி எழுப்பியது. அனுமதி பெறவில்லை என்றால் அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

அணை கட்டுவதால் தமிழகத்துக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 24-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com