நவ.6-இல் அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் நவ.6-இல் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் நவ.6-இல் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அதிமுக தலைமைக் கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் மற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்த மாநிலச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நவ.6-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
கூட்டத்துக்கு பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்க உள்ளாா். மாவட்டச் செயலா்கள், மாநிலச் செயலா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் குறித்து மாவட்டச் செயலா்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்க உள்ளாா். தோ்தல் கூட்டணி தொடா்பாகவும் மாவட்டச் செயலா்களுடன் அவா் ஆலோசிக்க உள்ளாா் எனத் தெரிகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...