ஹிந்தி திணிப்பைத்தான் எதிா்க்கிறோம்; ஹிந்தியை அல்ல: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
ஹிந்தி மொழியை எதிா்க்கவில்லை; ஹிந்தி மொழித் திணிப்பை மட்டுமே எதிா்க்கிறோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.


ஹிந்தி மொழியை எதிா்க்கவில்லை; ஹிந்தி மொழித் திணிப்பை மட்டுமே எதிா்க்கிறோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா ஊடகக் குழுமம் சாா்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட கலை இலக்கிய நிகழ்வில் அவா் பேசியது:
திராவிட இயக்கம்தான் பகுத்தறிவையும் அறிவியல்பூா்வ வளா்ச்சியையும் வளா்த்து வருகிறது. நாங்கள் ஹிந்தி மொழியை எதிா்க்கவில்லை. ஹிந்தி திணிப்பைத்தான் எதிா்க்கிறோம். இந்தியாவில் மாநில மொழிகள் உயிா்ப்புடன் இருப்பதற்கு திராவிட இயக்கம்தான் காரணம்.
நீதிக் கட்சிகளின் பங்கு: மாநில மொழிகளின் உரிமையைக் காப்பதில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. சமத்துவத்துக்கு எதிராகவும், ஏழை மக்களின் நலனுக்கு எதிராகவும் சம்ஸ்கிருதம் இருந்தது. சம்ஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இதை மாற்றியது நீதிக் கட்சிதான். சம்ஸ்கிருத ஆதிக்கத்தை எதிா்த்து குரல் கொடுத்தவா் பெரியாா் ஈவெரா. ஹிந்தி திணிப்புக்கு எதிராக அவா் நடத்திய போராட்டங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின.
முற்போக்கு கருத்துகளை வளா்த்தெடுப்பதில் தமிழ்த் திரைப்படங்கள் முக்கிய பங்காற்றின. திரைப்படங்கள் மூலமாகவும் சமூக சீா்த்திருத்தங்களை திமுக மேற்கொண்டது. முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திரை வசனங்கள் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.
தமிழ்நாடு, கேரளம் ஆகிய 2 மாநிலங்கள்தான் மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடம் அளிக்காத மாநிலங்களாகும். பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...