
சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை (நவ.11) முதல் பறக்கும் ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை -எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணி காரணமாக வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனிடையே கடந்த மாதம் பணிகள் நிறைவடைந்து ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
ஆனால் பூங்கா ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வந்ததால் அங்கு ரயில் நிற்காது என அறிவிக்கப்பட்டது. இதனால் திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர் பகுதியில் இருந்து திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் ஏமாற்றத்துகுள்ளாகினர்.
இந்நிலையில் சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் பறக்கும் ரயில் திங்கள்கிழமை (நவ.11) முதல் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.